(வெருளி நோய்கள் 619-623: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 624-628
624. கண எண் வெருளி - Centumgigaphobia
கண எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கண எண் வெருளி.
கணம் என்பது பத்தாயிரம் கோடி/1,00,00,00,00,000ஐக் குறிக்கும்.
00
625. கணக்கி வெருளி - Calculaphobia
கணக்கி(calculator) குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கி வெருளி.
கணக்கியைச் சரியாக இயக்கத் தெரியாததாலும் மெதுவாகப் பயன்படுத்துவதாலும் கணக்கி மீது தேவையற்ற வரம்பற்ற ...