(வெருளி நோய்கள் 881-885: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 886-890
கூட்ட வெருளி-Ochlophobia/Enochlophobia
கூட்டத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கூட்ட வெருளி.பொதுவிட வெருளி(agoraphobia) உடன் தொடர்பு உடையது.கூட்டம் என்பது சந்திப்பு என்பதையும் குறிக்கும். இங்கே திரளாகக் கூடுவதைக் குறிக்கிறது. திரளான கூட்டத்தைப்பார்ததால் அஞ்சுவோர் உள்ளனர்.கூட்டத்தில் பொருள்கள் தொலைந்து போகலாம், உடைமைகள் திருடு போகலாம், துன்புறுத்தல் நிகழலாம், தொற்றுநோய்க்கு ஆளாகலாம் ...