யார் கவிஞன் ? – கவிஞர் முடியரசன்
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன் தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத் தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன் மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன் மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன் காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்…
தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக! தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே! தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக! தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ பட்டென இருளைக் கிழித்தாற்போல் பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் : அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண் : உணவேயின்றி…
ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!! நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3…
மாநிலப் பேச்சுப் போட்டியில் பரமக்குடி மாணாக்கனுக்கு முதல் பரிசு
மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வேலூரில் நடைபெற்றன. இதில் பரமக்குடி கீழமுசுலீம்(KJEM) மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி இம்மாணவருக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவனைப் பள்ளித் தாளாளர் முகமது உமர், தலைமையாசிரியர் அசுமல்கான், சாரண ஆசிரியர் இதாயத்துல்லா ஆகியோர் பாராட்டினர். வாழ்த்து தெரிவிக்க : 97 50 10 51 41 தரவு…
மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா
தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…
நா.ஆண்டியப்பன் கவிதைநூல் வெளியீட்டு விழா
சென்னை தை 25, 2046 / பிப்.08, 2015
கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
961. நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer 962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம். 963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge 964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter 965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope 966….
கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்
881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர். 882. தூள் பாய்மமானி powder flowmeter 883. தெரிவுக் கதிரி selective radiator 884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer 885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope 886. தேய்கிளர் அளவி limen gauge 887. தேனிரும்பு மின்னோடிமானி…
கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்
841. திரிபளவு ஆய் கருவிகள் strain gauge testers 842. திரிபு அளப்பு முடுக்கமானி strain-gage accelerometer 843. திரிபு நிலநடுக்க அளவி strain seismometer 844. திருக்க மானி torque meter 845. திருக்கக்குழாய் பாகுமைமானி torque-type viscometer 846. திருக்கக்குழாய் பாய்மமானி torque-tube flow meter 847. திருக்கச்சுருள் காந்தமானி torque-coil magnetometer 848. திருகளவி screw gauge 849. திருகிழைஅளவி screw pitch gauge 850. திருகுபுரி…
பெருங்கவிக்கோ வா.மு.சே. முத்துவிழா, சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
ஆய்வு நோக்கில் ஏர்வாடியார் -பன்னிரு படைப்புகள் கருத்தரங்கம், சென்னை
சென்னை தை 24, 2046 / பிப்.7,2015
