கலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet
42 : வகுத்தூண்-diet உணவு-meal (ஆட்.,கால்.), food (வேளா.,சூழ.,), diet (பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு)-diet என்பதைத் திட்ட உணவு (ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத்…
கருவிகள் 1600 : 361-400 : இலக்குவனார் திருவள்ளுவன்
361. ஒப்புநோக்கு அடர்த்திமானி – comparator-densitometer 362. ஒப்புமானி – machometer / machmeter : விமானக்காற்று ஒப்புவிசைமானி: காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி (-செ.).ஒலி விரைவிற்கும் விண்ணூர்தி விரைவிற்கும் உள்ள ஒப்புமையைக் காட்டும் கருவி. எனவே சுருக்கமாக ஒப்பு மானி எனலாம். 363. ஒல்லைமானி – velometer : காற்றின் விரைவை அல்லது காற்றின்ஊடாகச் செல்லும் விண்ணூர்தியின் விரைவை அளக்கும் கருவி. வேகம் என்னும் பொருளில் தமிழில் கதழ்வு, கடுகல், முடுகல்,வல்லை, ஒல்லை முதலான 12 சொற்கள் உள்ளன…
கலைச்சொல் தெளிவோம் 41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari
41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari காதி அல்லது கதர்-khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்) எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி-khadi/கதர் கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில்கட்டும் காப்புநூலைக் கைந்நூல் எனக் குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.) என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால் நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது. ஈரணி-two piece…
கலைச்சொல் தெளிவோம் 40 – உடலுறுப்புகளுக்கான சுட்டடைகள்
அக– internal அண்மை–proximal கீழ்–inferior உழை-lateral எதிர்மம்-opponens குறு-brevis சேய்மை–distal நடுவண்மை – medial சிறு–மினிமி/minimi நெடு-longus நீள்-Extensor பின்-posterior புறம்-dorsal முன்-anterior வெளி-external மடக்கு-abductor விரி–adductor ஆழ்–deep மீ–superficial மேல்–superior உடலுறுப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதன்மை உறுப்பின் அருகில் அல்லது தொலைவில் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் அல்லது பக்கவாட்டில் என்பனபோல் அமைவிடத்தைக் குறிப்பிட்டே உடலுறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவர். இத்தகைய சுட்டடைகள் சங்கச் சொற்களாக அமையும் பொழுது எளிதான சொல்லாக்கங்கள் உருவாகின்றன. அண்மை(1), அண்மைய(1), சேய்மையன்(1), சேய்(43), சேய்த்து(8),…
கருவிகள் 1600 : 321-360 : இலக்குவனார் திருவள்ளுவன்
321. எதிர்முனைக்கதிர் மின்வலி மானி – cathode-ray voltmeter 322. எதிர்வினைப்பு மானி – reactive meter 323. எதிரிருமடி ஒளிமானி – jollys photometer : எதிர் இருமடி விதி (Inverse-square law) யின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட ஒளிமானி. 324. எதிருரு நோக்கி – stratton pseudoscope : முப்பருமான நோக்கியில் ஒரு வகை. இதிலுள்ள கண்ணாடிகள், வல, இடப் பார்வைகளைத் தலைகீழ் முறையில் காட்டும். 325. எதிரொலிமானி – echometer 326. எதிரொளி விகித மானி – glossimeter/…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…
பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து! பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து! பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து! பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து! பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து! பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து! பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து! பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்…
தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்
தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சி அருகில் கிறித்தவர்களின் தூய இடமாகக் கருதப்படும் வேளாங்கண்ணி உள்ளது. தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்விளக்கு என்ற எதுவும் செய்து தரப்படவில்லை. இங்கு ஊராட்சித்தலைவராக இருப்பவர் திருவளர்செல்வி. இவருடைய கணவர்தான் ஊராட்சிமன்றத் தலைவராக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்….
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க. இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை. கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர். அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…
நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்
உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு – சுமதி சுடர், பூனா
பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்
பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள் கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது. பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம்…
விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!
விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா! காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…
