திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத் தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார். எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா? …
மாற்றம் – கவிக்கோ ஞானச்செல்வன்
மாற்றம் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள் காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள் பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ? நெறிகள் மாறா நீணிலத்தில் நிற்பன நடப்பன மாறுவதால்! வறியோர் செல்வர் மாற்றமெல்லாம் வாழ்வின் உண்மை உரைப்பனவே! ஆடைகள் அணிகள் மாறிடினும் அரசியல் கட்சிகள் மாறிடினும் ஓடைகள் யாறுகள் மாறிடினும் உயர்மலை மடுவாய்…
தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்
தமிழ்வாணி உதவுவாயே! தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே! -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்வாணி படம் : நன்றி : தமிழ்வாணி பிரான்சு இதழ் +
கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! – மு.இலெனின் சுப்பையா
கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! கானல் நீரில், குடிநீர், மின்சாரம், கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து, தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக் கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த நாடு விடுதலைபெற்று…
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர்
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர் ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம். பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும் தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய் தீர்ப்பாகச் சொல்வதென்ன? பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய் தீர்ப்பாய்ப் படைத்தாரடி. பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல் தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய் …
சின்னஞ் சிறிய குருவி பார்! – தழல் தேன்மொழி
சின்னஞ் சிறிய குருவி பார்! சிலிர்த்துப் பறக்கும் அழகைப் பார்! கன்னங் கரிய குஞ்சுடன் களித்து மகிழும் அன்பைப் பார்! தென்னங் கீற்று ஊஞ்சலைத் தேடி யமரும் அறிவைப்பார்! புன்னை மரத்தில் கூட்டினைப் பொருந்தக் கட்டும் திறனைப்பார்! முன்றிலில் காய் நெல்லினை முனைந்து கொறிக்கும் முயற்சிபார்! சின்ன சின்ன கால்களால் சிலிர்க்க நடக்கும் விரைவைப் பார்! தன்னைத் தானே இயக்கியே தன்னின் குடும்பம் பேணுமே! உன்னை வளர்த்துக் கொள்ளவே உயர்ந்த கல்வி அளிக்குமே! விடுதலை யாய் வாழுமே, வீண் செயல்கள் இல்லையே! அடிமை வாழ்வில்…
கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி
கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…
புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 2/3
2 அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால் ‘கூத்தராற்றுப் படை’ என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),] கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு…
பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
பம்புளி என மருவிய பைம்பொழில் மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம். நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016) பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல் நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும் என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…
