தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11 அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் முதலிடத்தையும், அதே வகுப்பு மாணவர் சஞ்சீவு இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6 ஆம்…
ஈழத்தில் வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தினால். திருவள்ளுவர் சிலைகள் 16 வழங்கப்பெற்றன!
திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில் ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன. தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம் முதலான பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன் ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன்…
இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்
தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு. ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில் (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம் மும்மை மையத்திலும் / TRINITY…
கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!
கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்! அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்! முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்! வராததை வரவழைத்த வெற்றி மனிதர்! கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு …
மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது! அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார். இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கெனவே…
சிறைக்குள் வைத்தே பல நாட்கள் ‘விசாரணை’! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06
(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 தொடர்ச்சி) சிறைக்குள் வைத்தே பல நாட்கள் உசாவல்! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) 1980-களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கிய பெயர், ‘பாண்டியம்மாள்’. காணாமல்போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையிடம் கணவர் முறையிட, அடையாளம் தெரியாத ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கணவனையே கொலைகாரனாக்கி…
மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை
தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை – சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…
ஒய்.சி.சந்தோசம் முத்து விழா, சென்னை 600 004
ஆடி 31, 2047 / ஆக. 15, 2016 முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை தூய பீட்சு பள்ளி வளாகம், மயிலாப்பூர், சென்னை – 4 கவியரங்கம் இசையரங்கம் விருந்தரங்கம் பட்டிமன்றம் வாழ்த்தரங்கம் விருதரங்கம்
பேரா.க.அன்பழகனின் நூலறிமுகம், சென்னை 600 001
ஆடி 25, 2047 / ஆக. 16, 2016 மாலை 6.00 ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) பேரா.க.அன்பழகனின் ‘பொதிகையில் வீசிய பூந்தென்றல்’ நூலறிமுக விழா மு.பி.பாலசுப்பிரமணியன் இள.புகழேந்தி காசி முத்துமாணிக்கம்
தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001
ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்
ஒன்றாய் இருத்தலைப் பார்க்கிறோம் – அழ.வள்ளியப்பா
ஒன்று சேர்தல் கூட்டம் கூட்ட மாகவே குருவி பறந்து சென்றிடும். குவியல் குவிய லாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும். கூறு கூறாய்ச் சந்தையில் கொய்யாப் பழங்கள் விற்றிடும். குலைகு லையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும். வரிசை வரிசை யாகவே வாழைத் தோப்பில் நின்றிடும். மந்தை மந்தை யாகவே மாடு கூடி மேய்ந்திடும். சாரை சாரை யாகவே தரையில் எறும்பு ஊர்ந்திடும். நேரில் தினமும் பார்க்கிறோம் நீயும் நானும் தம்பியே! – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை! உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு. இந்த அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள்…
