கங்கை கொண்ட சோழபுரம், நாட்டியாஞ்சலி
மாசி 23 & 24, 2047 / மார்ச்சு 06 & 07, 2016 அருள்மிகு பெருவுடையார் ஆலயம் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம்
செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016
செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா வரும் மாசி 29, 2047 / மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:
இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.00 கவியரங்கம் : தலைமை : திருமதி இராணி பிரகாசு நூலாய்வு : தே.ந.கந்தசாமியின் புரியாத புதிர் – திருமதி இளங்கனி
இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்
இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள் புது தில்லியில் உள்ள இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் சுருக்கெழுத்தர் (stenographer), கணிணியாளர், கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk) முதலான 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்தர் (stenographer) – 03 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/- தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில்…
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 / 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று…
அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை
மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016 மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை
நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு
நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து: தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417
புதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா
மாசி 23, 2047 / மார்ச்சு 06, 2016 மாலை 5.30 சிறப்புரை : இரா.இளங்குமரனார்
ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!
“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா – கருத்தரங்கம், மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை…
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! – ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் பொதுவாழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் திருச்சி – 620 020, காசா நகர், சமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எசு.எம். மகாலில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : . புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது…
சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு
சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்-நடுவண் தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள குழு – இ, குழு – ஈ (Group – C & Group – D) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [விளம்பர எண்: SCR/R-HQ/128/S&G/2015-16] மொத்தக் காலியிடங்கள்: 14 பணி: குழு – இ (Group-C) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides). காலியிடங்கள்: 02. அகவை வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும். தகுதி: மேனிலைப்பள்ளி இறுதி…
