முதல் அகிலமும் சமகாலச் சூழலும் – அரங்கக்கூட்டம்
மாசி 11, 2047 / பிப்.23, 2016 மாலை 5.00 உமாபதி அரங்கம், சென்னை இரா.நல்லக்கண்ணு இரா.முத்தரசன் தா.பாண்டியன் புதுநூற்றாண்டுப் புத்தக நிலையம்
தமிழகக்கலை-பண்பாட்டுவிழா, ஈரோடு
மாசி 15, 2047 / பிப்.27, 2016
தேவகோட்டை மாணிக்கவாசகர் பள்ளியில் தேசியக் குடற்புழு நீக்க நாள்
தேசியக் குடற்புழு நீக்க நாள்(பிப்.10) பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் விழா தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நல்வாழ்வுத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மத்திய அரசு சார்பில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு நல்வாழ்வுத்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதைத்…
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன் – நிகழ்ச்சிப்படங்கள்
தை 19, 2047 / 02-02-2016 [embpicasa id=”6251926878083473041″] [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]
பா.கலையரசியின் ஆய்வு நூல் வெளியீடு
மாசி 08, 2047 / பிப்.20, 2016 மாலை 6.00 “முனைவர் மு.பி.பா.வின் தமிழ்ப்பணிகள்” முனைவர் பா.கலையரசி எழுதிய ஆய்வுநூல் நூல் வெளியிட்டுச் சிறப்புரை – பேரா.க.அன்பழகன்
அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)
அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்) துபாயில் செயல்பட்டு வரும் தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம் கட்டணமாகப் பெறப்படுகிறது. பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார் தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…
வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! – ப.கண்ணன்சேகர்
வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! காற்றில் மிதக்கும் ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும் தகவல் நலமென்றே தவறாது மக்கள் கேட்டிடும் தன்னிக ரில்லா ஊடகம்! ஊடக வரிசையில் வானொலிதான் உயர்ந்தே நிற்கும் எப்போதும் உயர்வான் கற்று பாமரன்ய்ம்! பாமரனும் பயிலும் பள்ளியென பாதைப் போட்ட வானொலியே படிக்க சொல்லும் வீடுதோறும்!…
சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் – இரா.திருமுருகன்
சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும், அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி, முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி, ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி,…
வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்
வையகத் தமிழ் வாழ்த்து பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…
தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன – அ.நா.பெருமாள்!
வடசொல் கலப்பு இருப்பினும் தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன! பல கலைநூல்கள் வடமொழியிலோ மிகுதியான வடசொல் கலப்புடனோ எழுதப்பட்டுள்ளதைப் பாரத நாட்டில் பல இடங்களில் வழக்கமாக இருப்பதைக் காணலாம். தமிழ் மருத்துவ நூல்கள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவற்றில் கூறப்பட்டுள்ளவை தமிழரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வடசொல் கலப்பாகவே அவை இருக்கும். இவ்வாறு பத தமிழிசை நூல்கள் வடமொழிக் குவியலாகவே வெளிவந்துள்ளன. இருப்பினும் அவற்றில் தமிழுணர்வு சிறப்பாக இணைந்து விளங்குவதைக் காணலாம். இவற்றை நன்கு உணர்ந்து காணின் இந்த…
திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து
திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத்…
தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! – ச.கு.கணபதி
தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! எந்தநாட்டின் பழைய மொழியினுள்ளும் இத்தகைய அரிய செய்திகளை அறிவிக்கத்தக்க பழஞ்சொற்கள் இல்லை. எந்த மொழியைப் பேசுவோரின் பழங்காலக் கலாச்சாரங்களிலும் தமிழரிடம் இருந்தன போன்ற தோட்டக்கலையின் தொடர்பான பழக்கவழக்கங்கள் இருக்கவில்லை. எனவே, தோட்டக் கலையின் தாயகம் தமிழ்நாடே என்பது உறுதி. அக்கலை, வரலாற்றுக்கு எட்டாத காலத்திலேயே தமிழரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிட்டது. இப்பரவலுக்குக் காரணம் தமிழ் வணிகர் கடல் கடந்து தொலைவு நாடுகளுக்குச் சென்று வந்ததே. ச.கு.கணபதி: குமரிக் கண்டத் தமிழர்: பக்கம்.75
