நல்லெழுத்தை மாற்றுவதோ? – க.தமிழமல்லன்
எழுத்தைச் சிதைப்போர் எச்சிலுக்(கு)ஒப்பு தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர் உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால் கழுத்து முறிந்துவிடும் காண். குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும் அறிவில்லார் செய்கொடுமை ஆய். அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும் தடியாரைத் தாங்கிடுதல் தப்பு. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார் பழிப்பார் தமிழின் பகை. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம் முழுத்தமிழ் கொல்வாரை மொத்து கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை என்னிடம் திருத்துகிறாய் இங்கு.? இதுவரை போதும்…
மொழியே நம் விழி – பேரா.முனைவர் சி.இலக்குவனார்
உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது. மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது. பேரா.முனைவர் சி.இலக்குவனார்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) சிற்றிலக்கியங்கள் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம். திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும்…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்- ஆய்வுரை 2. : இலக்குவனார் திருவள்ளுவன்
2 இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார். நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார். 1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள் 2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள் 3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள். 4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள். இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார். கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம்,…
தொல்காப்பியர் காலத் தமிழ், வளம் பெற்றிருந்தது – முனைவர் சி.இலக்குவனார்
தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும். தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்ளோம். தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன. பண்டைத் தமிழ்…
திராவிடம் என்பது பிந்தையது – பேரா.சி.இலக்குவனார்
தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது; திராவிடம் என்பது பிந்தையது. இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள். தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர். திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது. கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம்…
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே! ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….
கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு
காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : இலக்கிய நிகழ்ச்சி
ஐப்பசி 15, 2046 / நவ.01, 2015
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110
