கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer
60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer ஒப்ப(9) என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஒப்ப(17), ஒப்பது(1), ஒப்பார்(2), ஒப்பின்(1), ஒப்பின(1),ஒப்பினை(1) என்பன போன்று ஒத்த என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவர் கருத்தும் ஒப்ப இருக்கும் உடன்பாட்டையும் பின்னர் இது குறித்துள்ளது. இதனடிப்படையில் ஒப்புமொழி என்பது அக்ரிமெண்ட்டை-agreement-குறித்துள்ளது. இச்சொல்லிற்கு வேளாணறிவியலிலும் கால்நடைஅறிவியலிலும் உடன்படிக்கை என்றும், மொழியியலில் உடன்பாடு என்றும், ஆட்சித்துறையில்உடன்பாடு, உடன்படிக்கை, இசைவு, இணக்கம் என்றும், தொல்லியல்துறையில் இயைபு, ஒப்பந்தம் என்றும், மனையியலில் இசைவுப்பத்திரம், உடன்படிக்கை என்றும் வெவ்வேறாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்திலும் பொதுவாக…
தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்
தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம் தேவதானப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டியில் சாவெடு தொண்டு நிறுவனமும் தேனி அரவிந்து கண்மருத்துவமனையும் இணைந்து கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியன. இதில் கண்ணில் ஏற்படும் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் ஒழுகுதல், மாலைக்கண்நோய், கண்கூசுதல், கண்ணில் சீழ் வடிதல் முதலான பல்வேறு வகையான நோய்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருந்துகளும், மருத்துவப் பண்டுவம் தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவப் பண்டுவமும் அளிக்கப்பட்டது. …
கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt
59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt ஒடுக்கம்(7) சங்க இலக்கியங்களில் உடல் அல்லது உள்ளம் ஒடுங்கும் நிலையைக் குறிக்கிறது. எனினும், பின்னர் ஒடுக்கு என்பது அரசுக் கருவூலத்தில் பணம் செலுத்துவதற்குத் தரும் பெறுகைச் சீட்டைக் குறித்துள்ளது. (தமிழ்ப்பேரகராதி : பக்கம்: 589) இச்சொல்லின் வளர்ச்சி அல்லது மாற்ற நிலை தெரியவில்லை. ஒடுக்கு என்பது செலவினை ஒடுக்குவதைக்-குறைப்பதைக்-குறிப்பிட்டுப் பின்னர், அரசின் செலவைக் குறைப்பதற்காக மக்கள் செலுத்தும் வரியைக் குறித்திருக்கலாம். இப்போது, ரிசீப்ட் /receipt என்பதற்கு இரசீது என்றே பலரும் கையாள்கின்றனர்….
கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்
681. ங – கதிர் படிக நிறமாலைமானி X-ray crystal spectrometer 682. ங – கதிர் படிகஅச்சுக் கோணமானி X-ray goniometer 683. ங – கதிர் விளிம்புவிலகல்மானி X-ray diffractometer 684. ங- கதிர் நிறமாலைமானி X-ray spectrometer 685. சக்கரை நீரடர்மானி brix hydrometer சருக்கரைக் குறியீட்டு நீரடர்மானி. சுருக்கமாகச் சக்கரை நீரடர்மானி எனலாம். 686. சக்கரைமானி saccharometer 687. சமன்தள ஆடிமுப்பருமநோக்கி wheatstone stereoscope விழியிடைத் தொலைவை விடப் பெரிதாக இடைவெளி…
திட்டச்சேரியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்
திட்டச்சேரிப் பகுதியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரிப் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள், தனியார் இரத்த ஆய்வு நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இங்குப் பண்டுவத்திற்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான துணிகளையும், இரத்தக்கறை படிந்த பஞ்சுகளையும் சாலைஓரத்திலும், திட்டச்சேரி பேருந்து நிலையம் பின்புறத்திலும் கொட்டி விடுகின்றனர். திட்டச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள அரசு /…
என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை
ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பொறி.கெ.பக்தவத்சலம்
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) (தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) நிறைவு மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன், தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும் செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி! புத்தம் சரணம் கச்சாமி தருமம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி (மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி) என நிறைவு செய்கிறார்….
கலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue
58 : பயின்-resin; பசைமம்-glue பிசின் வகைகள் தமிழில் மா, பலா ஆகியவற்றின் பிசின் (Gum of the mango or the palmyra tree) இடவகம் என்றும், ஒருவகை மரப்பிசின், கம்பிப்பிசின் எனவும், இலவம் பிசின் (Gum of the redflowered silk-cotton), சலவகு அல்லது சுரழ் (மலை) (Gum of Bombax malabarica) அல்லது மயிலம் Gum of the silk-cotton tree (பரிபாடல் : அகநானூறு :)எனவும், இலந்தைப்பிசின் (Gum of the jujube tree) சீவகம் எனவும்,…
சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்
சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர் பண் – (நாதநாமக்கிரியை) தாளம் – முன்னை ப. தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத் து. ப. தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்) உ.1 ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்) 2 நாடென்றும் இனமென்றும்…
இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம் தேவதானப்பட்டியில் இ.கு.க.(எசு.டி.பி.ஐ.கட்சியின்) நகர நிருவாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பாரூக் இராசா தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொருளாளர் சையது ஆசிக் அவர்களும் கம்பம் தொகுததி தலைவர் நிசாம் அவர்களும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சாகிர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொட்டிப்புரம் ஊரில் அமையவுள்ள நீயூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில்…
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல! இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல் தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…
இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்
தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப. இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி) உ.1 என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) 2 அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) 3 அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி) 4 வரவரவே…
