காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு
காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும். குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…
சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா
தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்; சிறப்பு அழைப்பாளராக சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் அழைக்கப்பட்டார்; முகாம் பொறுப்பாளர் பெருமாள்தேவன் நன்றி கூறினார்; கோட்டச்செயலாளர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். 54…
தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன. தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பனிகொட்டுகிறது. இதனால் உழவு பெரிதளவில் பாதிப்படைகிறது. குறிப்பாக முளரிப்பூ(உரோசாப்பூ), மல்லிகைப்பூ முதலான பூ வகைகளும் காய்கறிகளும் பனியால் வாடி வருகின்றன. இந்நிலையில் மருந்துப்பொருளாகவும், கிருமிநாசியாகவும் உள்ள வேப்பமரங்களின் இலைகள் பனியால் கருகி இலைகள் உதிர்ந்து வருகின்றன. மேலும் கடும் பனியால் பொதுமக்கள் தீராத நெஞ்சுசளி, காய்ச்சல், இருமல் போன்றவையால் அதிக அளவில் பாதிப்படைந்து…
கருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்
641.குறுக்குமானி – stenometer: ஈர் இலக்குகளின் குறுக்கே உள்ள தொலைவை அளக்கும் கருவி. தொலைவுமானி வேறு உள்ளதால், இதனைக் குறுக்குமானி எனலாம். குறுக்கொலிமானி – psophometer : மின்சுற்றுகளில் குறுக்கிடும் ஒலிகளை அளவிடும் கருவி. மின் இரைச்சலளவி (.இ.) எனக் குறிப்பதைவிடக், குறுக்கொலிமானி எனலாம். குறுகிய அலைப்பட்டை தழல்மானி – narrow-band pyrometer குறை கடத்தி திரிபளவி – semiconductor strain gauge குறைஒளி ஒளிமானி – grease spot photometer துளைநோக்கி – borescope / boroscope : குறைபாடுகள் அல்லது செம்மையின்மையை…
தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை
தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும். சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல; கணவனே! வந்தேன்! பூங் : இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…
மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்
கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்
601. கிண்ண உலவை மானி-cup anemometer 602. கிண்ண மின்மானி-cup electrometer 603. கிண்ணக் காற்றழுத்தமானி-cup barometer 604. கிண்ணச் சங்கிலி உலவை மானி-bridled-cup anemometer 605. கிண்ணி வெப்பமானி-cup-case thermometer 606. கிணறுவகை நீர்ம-வளிய அழுத்தமானி-well-type manometer 607. கீற்றணி நிறமாலைமானி-grating spectrometer 608. கீற்றொளி உயிரி நுண்ணோக்கி-slit lamp biomicroscope 609. கீற்றொளி நுண்ணோக்கி-slit lamp microscope :கருவிழிப்படலப் பின்பரப்பை ஆய்வதற்குரிய இணைப்புடைய நுண்ணோக்கி. 610. குண்டு நீரடர்மானி-balling hydrometer 611. குண்டு மிதவை நீர்ம மட்டமானி-ball-float liquid-level meter…
புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை! – வைகை அனிசு
புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் முகம் சுளிப்பு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதிய பேருந்துநிலையத்தில் இலவசக் கழிப்பிட வசதி இல்லாததால் பட்டப்பகலில் ஆண்கள் பேருந்துநிலையத்தினுள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிக்கமேடு, கடற்கரை, ஆசிரமங்கள், தியானமண்டபங்கள், திரௌபதி அம்மன்கோயில் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இதனைக் கண்டு களிப்பதற்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை…
தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு
தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு…
கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்
காந்த நிறமாலைமானி-magnetic spectrometer காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்த வெப்பமானி- magnetic thermometer 564. காந்தச்செறிவுமானி- coercimeter : இயற்கைக் காந்தம் அல்லது மின்காந்தத்தின் காந்தச் செறிவை அளவிட உதவும் கருவி. காந்தத் திசை காட்டி- magnetic compass காந்தத் திறன்மானி- magnetic potentiometer காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope காந்தப் பாயமானி-flux meter 569. காந்தப்பின்னடைவுமானி-hysteresimeter: காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலையை அளவிடும் கருவி. (காந்தத்தயக்கமானி (-இ.)…
கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்
521. கப்பற்பயணவரைவி – loxodograph : கப்பல்பயணத்தைப்பதிய உதவும் கருவி. 522. கம்பளித்தரமானி – lanameter : கம்பளியின் தரத்தை அளவிடும் கருவி. 523. கம்பிவலைத் திருத்தி மானி -grid-rectification meter 524. கம்பிவலை நிறமாலைமானி – grid spectrometer 525. கம்பிவலை மின்னோட்ட மானி/ கம்பிவலை அலையியற்றி-grid-dip meter/ grid-dip oscillator : கம்பிவலை மின்னோட்டத்தை அறியக் கம்பிவலையில் ஒருங்கிணைந்த – பன்முகவீச்சு மின்னணுக் குழாய் அலையியற்றிக் – கருவி. 526. கயக்கமானி – taseometer : கட்டமைப்பின் கயக்கத்தை (stress in…
