திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54 கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் பொருள் உரை திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள் சொல்: கடுகு கடுகு =…
‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?
‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா? தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள். உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும். மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா நாள்: தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்: நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை, சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ‘ஒளி எனும் மொழி’ என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு இந்தப்…
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.
அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் நேரம் : மாலை 6.30 – 8.30.. இடம்…
கலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video
51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video படம் எடுக்கும் பொறியை நிழற்படக் கருவி (ஆட்.), புகைப்படக் கருவி (வேளா.,மனை.), ஒளிப்படக்கருவி(பொறி.), என்று சொல்கின்றனர். போட்டோ/photo என்பதற்குத் தொடக்கத்தில் புகைப்படம் என்றும் பின்னர் நிழற்படம் என்றும் சொல்லி இப்பொழுது ஒளிப்படம் என வந்தாலும் பழஞ் சொற்களையே சில துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம் அல்லது நிழற்படம் அல்லது ஒளிப்படம் என்னும் கருவியின் அடிப்படையில் படமெடுக்கும் கருவியைக் குறிப்பிடுகின்றனர். போட்டோ/ போட்டோகிராபிக்(கு) என்றால் ஒளிப்படம் என்று சொல்லி அதனை எடுக்கும் கருவியை – ஒளிப்படக்…
கலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு); திணைப்படம்- atlas (புவியியல்)
50. பிடரென்பு – atlas (உடற்கூறு) முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧) > பிடரென்பு எனலாம். ஆனால் புவிப்பரப்பைக் காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி [(ஆட்.), (புவி.), (மனை.)] எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும அமையும். ஐந்திணைப் படங்களைக் குறிப்பதால் திணைப்படம் என்பதே பொருத்தமாக அமையும். திணைப்படத்தைக் கோளவடிவில் காட்டும் கோள வடிவிலான குளோபு-globe…
கலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum
49.குழியம்–acetabulum அசெட்டாபுலம்- acetabulum என்பது இடுப்பு எலும்பின் உட்குழிவான பகுதியைக் குறிக்கிறது. பந்துக்கிண்ண மூட்டுக்குழிவு(வேளா.), இடுப்பெலும்புக்குழி(உயி.), கிண்ணக்குழி(மனை.), கிண்ணக்குழிவு(மரு.), இடுப்பு எலும்புக்குழி, ஆழ்குழி(கால்.) என இதனைக் குறிப்பிடுகின்றனர். குழி(௧௭), குழிசி(௧௨), குழித்த(௭), குழித்து(௧), குழிந்த(௩), என்றும் மேலும் சிலவுமாகக் குழிபற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. இவைபோல் குழிவாக அமைந்த உறுப்புப் பகுதியைக் குழியம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். குழியம்-acetabulum
கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்
48 : மது வகைகள் பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் ஓங்கு மணற் குலவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது என்ற வகையில் அறவே நீக்கப்பட வேண்டியவைதாம். எனினும், இப்போது விற்பனையில் பல்வகை மதுவகைகள் உள்ளன என்பதால் அவற்றைத் தமிழில் குறிக்க வேண்டி…
கலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip
47 : சிமிழ்–chip சிப்-செதுக்கல், சில்லு எனக் கணிணியியலில் குறிக்கின்றனர். கணிணியியலில் சிப் என்பது செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக் காஞ்சி 483) எனப் பொருள்களை ஏந்தித்தாங்கும் உறியைச் சிமிலி எனக் குறித்துள்ளனர். சிமிலி என்னும் சங்கச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சிமிழ். ‘சிமிழ்’ என்பது சிறு கொள்கலன்தான். எனவே, செதுக்கல், சில்லு என்று எல்லாம் சொல்லாமல் ‘சிமிழ்’ என்றே குறிக்கலாம். சிமிழ்-chip
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) காட்சி – 7அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடில் முன்வாசல் நிலைமை : (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப : நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி : வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…
கலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel
46 : ஒலிப்பம்-decibel தெசிபல்/decibel என்பதைப் பொறிநுட்பவியலில் ஒலித்திறன்அலகு என்றும், சூழலியலில் ஒலிச்செறிவுஅலகு என்றும், மனையறிவியலில் ஒலியலகு என்றும் கையாளுகின்றனர். ஒலியலகை ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு வகையாகக் கையாளுவதவிட ஒரே சொல்லைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாக அமையும். சங்கச் சொல்லான ஒலி என்பதன் அடிப்படையில் ஒலிப்பம் என்று சொல்லலாம். ஒலிப்பம்-decibel ஒலிப்பமானி-decibel meter
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார். செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித்…
