கலைச்சொல் தெளிவோம் 56 : அன்னிலை-temporary
56 : அன்னிலை-temporary தற்காலிகம்: டெம்பரரி/temporary-குறுங்கால, நிலையற்ற, தற்காலிகமான என ஆட்சியியலில் கையாளுகின்றனர்; புரொவிசனல்/provisional-தற்காலிக என மனையறிவியலில் கையாள்கின்றனர்; இச்சொல்லிற்கு ‘நிகழ்காலத்திற்கான, அப்போதைக்கான’ என்னும் இரு சொற்களையும் ஆட்சியியலில் கையாள்கின்றனர். எனினும் temporary, provisional ஆகிய இரண்டு சொற்களுக்குமே தற்காலிகம் என்னும் சொல்லைக் கையாளுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு சொல்லே கிடையாது. (தற்காலம் என்பது வேறு; குறிப்பிற்குரியவரின் சமகாலத்தைக் குறிக்கும்.) பெருமனெண்ட்(டு)/permanent-நிலையான என மனையறிவியலிலும் கணக்கறிவியலிலும் கையாளுகின்றனர்; வேதியியலில் நிலைப்புறு எனக் குறிப்பிடுகின்றனர். temporary என்பது நிலையற்றதைக் குறிக்கிறது. உயர் திணை…
கலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision
57: இடையீடு-provision இடை என்பது நடு என்னும் பொருளிலும், இடையே என்னும் பொருளிலும், இடுப்பு என்னும் பொருளிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இடையின் அடிப்படையாக இடைப்படுதல் முதலான வேறு சொற்களும் கையாளப்படுகின்றன. இடையே வருதல் என்னும் பொருளில் உள்ள சொற்கள், இடையே தடையாக வருதல் என்னும் பொருளில்தான் வந்துள்ளன. எனினும் இடையிடுபு என்னும் சொல் பின்வருமாறு கையாளப்படுகின்றது. கூர்உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு (நெடுநல்வாடை 119) இடையே இடுதல் என்னும் இச்சொல்லை நிலையான ஒன்று வழங்குவதற்கு இடையே தரப்படுகின்ற-இடையே இடப்படுகின்ற-என்னும் பொருளில்…
கருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்
481. கணக்குமானி – arithmometer : கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும். 482. கதிரலகுமானி – roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம். 483. கதிரலைவுநோக்கி – ray oscilloscope 484. கதிருமிழ்வுமானி – emanometer 485. கதிர்ப்பு நோக்கி – spinthariscope : ஊடிழை கதிர்த்திரை , நீளலை மினுக்கத்தால் கதிரியக்க…
கலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean
55: தலைமையாளர்-dean தாம்வரம்பாகிய தலைமையர் என்கிறது திருமுருகாற்றுப்படை(134). டீன்/ dean என்பதற்குத் தலைமையர் என்று சொல்லலாம் என அறிஞர் ஔவை அவர்களிடம் முன்பு ஒருமுறை(199௦) சொன்னதற்கு, இச் சொல் சரியாக இருந்தாலும், வேறு வகை யில் (தலைமயிர் என) இழிவாக மாற்றிக் கூறுவதற்கு இடம் தரும் என்பதால் வேண்டா என்றார். ஆனால், சங்கஇலக்கியத்திலேயே இச்சொல் உள்ளதை இப்பொழுதுதான் அறிந்தேன். அறிஞரின் கருத்தும் புறந்தள்ள இயலா ஒன்றே. எனவே, தலைமை(1) அடிப்படையில் தலைமையாளர் எனச் சொல்லலாம். தலைமையாளர்-dean
கலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant; சிறுபொழுது-short period
54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant; சிறுபொழுது-short period சிறுநனி(7) : மிகச்சிறிய பொழுதைக் குறிக்கும் வகையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் (கலித்தொகை ௧௨.௮) சிறுநனி தமியள் ஆயினும் (புறநானூறு ௨௪௭.௯) சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் (அகநானூறு ௧௮௦.௧) நனி என்னும் சொல் மிகுதி என்னும் பொருளைத் தந்தாலும் சிறுநனி எனச் சிறு என்னும் சொல்லுடன் சேர்ந்து ஒற்றைச் சொல்லாகும் பொழுது குறுகிய பொழுதையே குறிக்கிறது. short period-குறுங்காலம்(பொரு.,) என்றும் short term-குறுகியகாலம், குறுங்காலம்(மனை.,உள.,) என்றும் அனைத்துத்…
கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial
53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257) கொடுந் தாள் முதலையும், இடங்கரும்,…
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன். அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…
வீர வணக்கப் பேரணி, தை 11, 2046, சென்னை சன.25
கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python
52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.
சித்தன் குரல் இதழ் அறிமுக விழா – தை 11, 2046, திருவண்ணாமலை
மொழி உரிமைப்பேரணி, தை 11, 2046, சென்னைக் கடற்கரை
உம் பேச்சு கா – பட்டு இளங்கதிரின் நூல் வெளியீடு
தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம், அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல் வெளியீடு : இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர் : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை : பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு : சந்திரன் 97 900 100 94
