ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1040 – 1043: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1022 – 1039 இன் தொடர்ச்சி) 1040. நுண்ணுயிரி மரபியல் Microbial genetics 1041. நுண்ணுயிரி வளைசலியல் Microbial Ecology 1042. நோய்மி முறிப்பியல் Antibiotic என்பதற்கு ஆண்ட்டி பையாட்டிக்கு, உயிரி எதிர்ப்பி, உயிரி முறிப்பி, உயிரி யெதிர்ப்பி, உயிர் எதிரி, எதிர் உயிர்ம மருந்து, எதிர்மருந்து, கிருமி முரணி, நச்சொடுக்கி, நுண்மக்கொல்லி, நுண்ணுயிரி முறி, நுண்ணுயிரி முறிப்பியல், நுண்ணுயிரிக் கொல்லி, நுண்ணுயிரிக் கொல்லி (முறி), நுண்ணுயிர் எதிரி, நுண்ணுயிர் எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, நுண்ணுயிர்ப்…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1221-1230)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால்அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல் மாலை, பிரிந்தார் உயிர் பறிக்கும் வேல். (1221) மாலைப்பொழுதின் துணைவரும் என் தலைவர் போல் கொடியவரோ?(1222) பிரிவால் வாடும் என்னைப் பனியால் வாட்டுகிறதே மாலை! (1223) காதலர் இல்லாதபொழுது கொலையாளிபோல் வருகிறதே மாலை! (1224) காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்கு இழைத்த தீங்கு என்ன? (1225) மாலை கொடியது என்பதை மணந்தவர் பிரியாக்காலை அறியவில்லை. (1226) வேளைதோறும் அரும்பி, மொட்டாகி மாலை…
காதலிப்போம் எந்நாளும்!
காதலிப்போம் எந்நாளும்! – இலக்குவனார் திருவள்ளுவன் மேற்குறித்த கட்டுரையை என்ன வேண்டும் தளத்தில்(http://ennavendum.in/) காதலிப்போம் எந்நாளும்! தலைப்பைச் சொடுக்கிக் காண வேண்டுகிறேன்.
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1022 – 1039 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1018-1021 இன் தொடர்ச்சி) 1022. நுட்பியல் technology என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன். தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச் சொற்களாக உள்ளமையால் நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம். Technology 1023. நுண் தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Micro climatology 1024. நுண் உயிரியல் Microbiology 1025. நுண் குமுகவியல் Micro Sociology 1026. நுண் நிலநடுக்கவியல் Microseismology…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) “நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?” “மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?” “அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே” என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன். “உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1018-1021 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 995 -1017இன் தொடர்ச்சி) 1018. நீர் வள இயல் Fluviology – நீர்நிலையியல், நீர்வழி யியல், ஆற்றியல் எனக் குறிக்கப் பெறுகிறது. Limnology – நன்னீரியல், ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு, ஏரியியல், நன்னீர் உயிரியல், நீர்நிலைகளியல் எனக் குறிக்கப் பெறுகிறது. நீர் என்றால் நாம் சாக்கடை நீரைக் கருதுவதில்லை. நீர் நிலைகளின் நீர் தூய்மையாக இருப்பதில்லை. எனவே, நன்னீர் என்ற குறிப்பு இங்கே தேவையில்லை. Limno எரி, குளம், குட்டை எனப் பொருள்கள்….
காட்சிப்பொருளல்ல நீ!- முனைவர்.கிருட்டிணதிலகா
காட்சிப்பொருளல்ல நீ! ஆவலாய்ச் சுற்றி வரும் வண்டுகள். பெண்ணே! காவலாய் உரோசாவைச் சுற்றியெழும் முட்களாய் பாவையே! பார்த்திடு! பதம் பார்த்திடு! ஆவியில் வீரம் விளையப் பூத்திரு! பாதகம் செய்பவரை மோதி மிதித்து விடு! காதகர் பேசிடும் சாதகப் பேச்சுகளைத் தீயிலிடு! மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்தி விடு! ஆதவனாய் ஆர்த்தெழு! வேதனையை ஒதுக்கிவிடு! பாரதம் கொண்டதொரு பாரம்பரியம் போற்றிவிடு! வேரதாய் விளங்கும் வேலியாம் அடக்கம் காத்திடு! போடுகின்ற உடைகண்டு போற்றவேண்டும் யாவரும்! பீடுநடை தான்கொண்டால் போற்றிடுவார் புலவரும்!…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 995 -1017: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 976 – 994 இன் தொடர்ச்சி) 995. நீரியவானிலை யியல் Hydrometerology 996. நீரியங்கியல் Hydro Dynamics 997. நீர்மப் பொறியியல் Hydraulic Engineering 998. நீர்ம இயல் Hydrology 999. நீரிழிவியல் Diabetology 1000. நீர் உயிரியல் Hydrobiology / Aquatic Biology 1001. நீர் நச்சியல் Aquatic toxicology 1002. நீர்நில வாழியியல் bátrakhos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தவளை. தவளை முதலான ஈரிட வாழ்வி – நீர்நில வாழி குறித்த ஆராய்ச்சியியலை Batrachology…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 34
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி “கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. “காலி புரூஃபில்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 976 – 994 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 962 – 975 இன் தொடர்ச்சி) 976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி, நிலத் தோற்றம், நிலவெளி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. நில அமைவு என்பதையே நாம் பயன் படுத்தலாம். எனவே, நிலஅமைவு வளைசலியல் – Landscape ecology எனலாம். Landscape ecology 977. நிலக்கரிப்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45
(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 962 – 975 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 948 – 961 இன் தொடர்ச்சி) 962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiopathology 963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiology 964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல் Event Chain Methodology 965. நிகழ்வுத் தாக்கவியல் Hedonology 966. நிண நீரியல் Lymphology 967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் பொறியியல் என்று தான் பொருள். Engineer என்றால் பொறியாளர் என்பது தவிர…
