இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த பொழுது – திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன. திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…
குதூகலித்தே ஆடுவாய் ! – கே. கமலசரசுவதி
குதூகலித்தே ஆடுவாய் ! குதித்தாடிக் குதித்தாடிக், குதூகலித்தே ஆடுவாய் ! குமிழ்ச் சிரிப்புக் காட்டியே, குறுநகையும் புரிவாய் ! குதித்தாடும் காலமிது, குறை எதுவும் வைக்காதே ! சிறை பூட்டும் காலமதில், கால் விலங்கும் பூட்டிடுவார். எதற்கென்றும் அஞ்சாதே ! எவரிடமும் கெஞ்சாதே ! குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி, குதூகலமாய் நடனமிடு ! – கே. கமலசரசுவதி
சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும் தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.
மறக்க முடியுமா? – பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் & தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். மாசி 29, 1938 / 1907ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம் நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார். அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப் படிப்பு தடைபட்டு, தொடர முடியாமல் இருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இவரின் தந்தை 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான்…
வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணப் படம் வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்! காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்! கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 29…
கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன். கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 இருபத்தோராம் பாசுரம் மேம்பட்ட தமிழர் நாகரிகம் ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்; யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்; பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்; சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்! யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு! ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள் காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும் தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் ! இருபத்திரண்டாம் பாசுரம் தமிழ்க்கடமைகள் பலப்பல செயவேண்டும் கத்துகடல்…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 பத்தொன்பதாம் பாசுரம் தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க, முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் , வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம் பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே ! நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல் வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் ! கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும் கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய், எம்பாவாய் ! இருபதாம்…
ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
விரைவாக நடைபெறும் சமற்கிருதத் திணிப்பு! மெல்லவும் விழிக்காத தமிழ் மக்கள்! ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! பாரதிய மக்கள்(சனதாக்) கட்சியும் பேராய(காங்கிரசு)க் கட்சியும் இந்தித்திணிப்பிலும் சமற்கிருதத் திணிப்பிலும் ஒற்றுமை உள்ளவை. பேராயக்கட்சி மெல்லத்திணிப்பதுபோல் நடிக்கும். பா.ச.க.விற்கு அந்த நடிப்பு பிடிக்காது. ஆனால், வேறொரு வேற்றுமை உண்டு. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்துமதத்தைத்திணிப்பதிலும் பாசக கவனம் செலுத்தும். நம் நாட்டில் இந்தியையைும் சமற்கிருதத்தையும் திணித்துத் திணித்துச் சலிப்பு ஏற்பட்டு விட்டது பா.ச.க.விற்கு. எனவே, உலக…
தேடித்தேடி அறிந்து தமிழ்ச்சொற்களையே ஆள வேண்டும்! – மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பிறமொழிச் சொற்களும் தமிழாக்கமும் தேடித்தேடி அறிந்து தமிழ்ச்சொற்களையே ஆள வேண்டும்! கண்ணால் பார்க்கலாம், கண்ணாடி தேவை எனில் அதன் வழி பார்க்கலாம். நல்ல மாம்பழம் இருக்க மாங்காயைத் தேடலாமோ? வேர்ச் சொற்கள் புதைந்து பொலிந்து கிடப்பது தமிழ்ச் சொற் களஞ்சியம். ஆயினும் காலத்துக்குக் காலம் பிறமொழிச் சொற்களின் (பாளி, பிராகிருதம், வடமொழி) ஒலிபெயர்ப்பைத் தமிழ்ச் சொற்களாக்கும் முயற்சி தொடர்ந்துள்ளது. தொல்காப்பியர் கோட்டிட்டுக் காட்ட, நன்னூலார் சிறிதே விளக்க, வீரசோழியத்தார் ஒலிபெயர்ப்புக்குத் தற்பவம், தற்சமம் என்ற வழிகாட்டலை விட்டுச் சென்றார். தற்பவம் = வடமொழிக்கே…
கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…
