மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி
மலரினும் மெல்லியது காதல் ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால் உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும் தகர்த்து இணைவதே உண்மைக் காதல் ! புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல் அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் ! என்னவென்று விளக்கமுடியாவிடினும் ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் ! இடையில் வந்தவள் என்றபோதும் மன எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி ! உன்னத காதலிக்கு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி அப்போதைய ஆளுநர் திரு சிரீபிரகாசா அவர்கள், “ஆடவர்கள் வெறித்துப் பார்ப்பதை மறுக்கும் ஒரு பெண்ணைக் கூட நான் இதுவரை சந்தித்ததில்லை” எனப் புதிய மண்டபத்திறப்பு விழா ஒன்றில் பேசினார். இது குறித்த கண்டனைக் கணைகளை விடுக்கப் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை. பின்வரும் பேராசிரியர் இலக்குவனாரின் உரையே அவரின் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தும். “பந்தயம் பார்க்கவும் பதக்கங்கள் வழங்கவும் கட்டடத் திறப்பு விழாக்களில்…
கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்! அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும் பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும் பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு! ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17) விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின் விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்! மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?…
தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் – செங்கோ
தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் மருதிருவர் மண்ணிலே… சிவகங்கை இராமச்சந்திரன் (புரட்டாசி 02, 1915)16.09.1884இல் பிறந்து (மாசி 15, 1964)26.02.1933 இல் மறைந்த திராவிடர் இயக்கத் தன்மதிப்புப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம் சாதி ஒட்டினை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்துச் சாதியைத் துறந்தவர். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும்…
கலைச்சொல் : இடைநல அரசு – care taker government :- இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் : இடைநல அரசு – care taker government காபந்து அரசு என்றால் என்ன என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி? காவந்து(kawand) என்னும் உருதுச் சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 869) குறித்திருக்கும். “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘ என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை) காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் ! பதினான்காம் பாசுரம்…
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக ஆட்சிகவிழும்; தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார். பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…
திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல். (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய், தாம்காட்ட யாம்கண் டது. தீராத்துயர் ஆக்கிய கண்களே! நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப் பைதல் உழப்ப(து) எவன்? விளைவை ஆராயாமல் கண்டகண்,…
கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு…
ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? – கு. நா. கவின்முருகு
ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம் பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்! பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார் பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்! குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார் மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால் மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்! பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன? இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு! எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய் எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை! சச்சுவுக்கு…
ஐ.நா அவையின் பட்டயம் சமற்கிருத மொழியிலேன்? – மு.பி்.பா.
ஐ.நா அவையின் பட்டயம் சமற்கிருத மொழியிலேன்? அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோ நகரில் பன்னாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1945ஆம் ஆண்டு அட்டோபர் 24ஆம் நாள் நடைபெற்றது. அதில் ஐ.நா அமைப்பை உருவாக்குவதற்காக உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உரிமை ஆவணமாக இயற்றப்பட்டது. இந்த அறிக்கை/பட்டயம்(charter) ஐ.நா-வின் ஆறு அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஐ.நா மன்றத்தின் அலுவல் மொழிகளாக அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இரசியம், எசுப்பானியம் (Spanish) ஆகிய ஆறு மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆறு மொழிகளோடு ஏழாவது…
