புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.21-25
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் திராவிடம் 21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத் தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ் மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே, திராவிடம் 22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும் பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால், 23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து தலைப்பிறந்த வளமருதந்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 673 – 682 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 இன் தொடர்ச்சி) 673. சிற்றின்பவியல் érōs, érōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் காதல். பாலியல் விழைவு, சிற்றின்பம் தொடர்பான வற்றைக் குறிக்கப் பயன் படுத்தப்படுகின்றன. Erotology 674. சீனவியல் Sinology 675. சுதைப்புல இயல் சுண்ணாம்புத் தளத்தைக் குறிப்பிடும் Karst என்னும் செருமானியச் சொல்லில் இருந்து உருவானது. Karstology 676. சுமேரிய இயல் Sumerology 677. சுரங்கப் புவியியல் Mining Geology– சுரங்க நிலவியல், கன்னுதற் புவிச்சதிதவியல், கன்னுதற் புவிப்பொதியியல் எனப்…
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் நிறைவு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 – நிறைவு திறனாய்வு (தொடர்ச்சி) இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 54
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துகளை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 658 – 663 இன் தொடர்ச்சி) 664. சிறப்புச் சொல்லியல் gélōs, gélōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் சிரிப்பு. onomato-என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பெயர், சொல். இங்கே சிறப்புச் சொல்லைக் குறிக்கிறது. சிறப்புச் சொல் தோற்றவியல் என முதலில் குறித்திருந்தேன். இப்பொழுது சுருக்கிச் சிறப்புச்சொல்லியல் எனக் குறித்துள்ளேன். சொல்லியல் என்றால் வேர்ச் சொல்லியல் முதலியவற்றோடு குழப்பம் நேரலாம். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை. Onomatology 665. சிறு கோல் centimetre 666. சிறு தட்பியல் காண்க…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 658 – 663: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 641 – 657 இன் தொடர்ச்சி) 658. சாறுண்ணியியல் Sapro என்னும் பழங்கிரேக்கச் சொல் அழுகிய, பதனழிந்த பொருள்களைக் குறிக்கிறது. இங்கே சாறு என்பது நற்சாற்றினைக் குறிக்க வில்லை. பதனழிந்த அழுகிய பொருள்கள் வெளிப்படுத்தும் நீர்மத்தைக் குறிக்கிறது. இத் தகைய நீரினை உண்ணும் உயிரினங்களைப்பற்றிய துறை. எனவே, அழுகியபொருள் துறை என்று சொல்லாமல் சாறுண்ணி யியல் எனப்படுகிறது. Saprobiology 659. சிதட்டியல் பார்வையின்மையியல், குருட்டியல் எனப்படுகின்றன. நானும் முதலில் குருட்டியல் என்றே குறித் திருந்தேன். குருடு என்று சொல்வதில்…
பெரியார் பற்றி அறிஞர்கள் – 1 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தந்தை பெரியார் சிந்தனைகள் 38 இன் தொடர்ச்சி தந்தை பெரியார் சிந்தனைகள் 39 8. பெரியார் பற்றி அறிஞர்கள் (1) “நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தியபின்னர் அவர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கனமழையாகும்; கல்மழையாகும்; மழை மூன்றுமணி நேரம், நான்கு மணிநேரம் பொழியும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர் ” -திரு.வி.க. (2) “எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்த்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ-அங்கங்கெல்லாம் ஈ.வே.இரா.வின் பெயர் ஒளி வீசித்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 641 – 657 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640 இன் தொடர்ச்சி) 641. சமநிலையற்ற வெப்ப இயங்கியல் Nonequilibrium thermodynamics 642. சமநிலையியல் ísos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் சமம். Isostatics 643. சமய ஒழுக்கவியல் Religious ethics 644. சமய விழாவியல் Heortology – விழா இயல், சமய விழாவியல், விழா விளக்கவியல் என மூ வகையாகக் கூறப்படுகிறது. விழாவியலில் சமய விழாவும் அடங்கும். விழா வளைசலியல் (Festive ecology) எனத் தனியாக விழா குறித்த இயல் இருப்பதால் இதனைச் சமயவிழாவியல்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 29
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 615 – 622 இன் தொடர்ச்சி) 623. கோட்பாட்டு உளவியல் நேர்பொருள் தூய உளவியல் என்பதாக இருந்தாலும் கோட்பாடு சார்ந்த இயல் என்பதால் கோட்பாட்டு உளவியல் எனப்படுகிறது. Pure Psychology 624. கோபுர இயல் Pyrgology 625. கோமாளி யியல் Clownology 626. கோரைப்புல்லியல் Caricology 627. கோல் Metre 628. கோழிப்பண்ணைப் பொருளியல் Poultry economics 629. கோழியின மரபியல் Poultry genetics 630. கோளியல் Planetology 631. கோள் இயற்பியல் Planetary physics 632….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே, பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 615 – 622 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 608 – 614 இன் தொடர்ச்சி) 615. கைவரிஇயல் chiro- என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கை.உள்ளங்கையில் உள்ள கோடுகள்/வரிகள் – இரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்கும் கலையைக் குறிக்கிறது. எனவே, கைவரியியல் எனலாம். Chirology 616. கைவினைநுட்பியல் Craft Technology 617. கொடியியல் vexillum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொடி. எனவே கொடியியல் – Vexillology எனப்பட்டுள்ளது. Vexillology 618. கொப்பூழ்க்கொடி இயல் placenta என்பதை அணையம், ஊட்டத்திண்டு, ஒட்டிடம், கருக்குடை, கருவளர் படலப்பை,…
