ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22 திறனாய்வு 4 தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம். நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 608 – 614 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 594 – 607 இன் தொடர்ச்சி) 608. கூலவியல் céréale என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூலம் (தானியம்)தொடர்பான. Cerealogy/ Cereology 609. கூளவியல் crappe என்னும் பழம் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூளம்(குப்பை). Crapology 610. கெலுடிக்கு சடங்கியல் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கி.மு.500 முதல் கி.பி. 500 வரை இருந்த மொழி, அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் சமயம் கெலுடிக்கு ஆகும். இச்சமயச் சடங்குகளை ஆராயும் துறை கெலுடிக்கியல். கெலுடிக்கு(Celtic) சமயத் தலைவரை…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான…
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 37 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 38 8. இலக்கியம் ‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர். ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்வார்த்தைபதி னாயிரத் தொருவர் (குறிப்பு 1 ) என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 594 – 607 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 இன் தொடர்ச்சி) 594. குறைமை இயல் Defectology 595. குற்றவிய உளவியல் Criminal Psychology 596. குற்றவிய நுட்பியல் குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர். குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம். எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க: Financial Engineering – நிதி நுட்பியல் Criminal Technology 597. குற்றவியல் Criminology 598. கூகுளியல் Googleology…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 இன் தொடர்ச்சி) 584. குழு இயங்கியல் Group dynamics 585. குழுமநலன் பொருளியல் Agglomeration Economics 586. குளுமை இயற்பியல் Cryophysics 587. குளுமை மின்னணுவியல் Cryoelectronics/ Cryotronics 588. குளுமை வடிவியல் Cryomorphology 589. குளுமை யியல் Cryology 590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். Parapsychology(2) / Mantology 591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. Cryptology 592. குறி…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள். “வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 இன் தொடர்ச்சி) 571. குமுகக் கிளைமொழியியல் Social Dialectology 572. குமுக வளைசலியல் Social Ecology/ Socioecology 573. குமுகவியல் Sociology 574. கும்பல் உளவியல் Crowd Psychology 575. குருதி இயல் Haematology / Hematology 576. குருதி நோயியல் Hemopathology 577. குருதியோட்டஇயல் haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம். Hemorheology/ Haemorheology 578. குருத்தெலும்பியல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 இன் தொடர்ச்சி) 556. குடும்ப உறவின் இயங்கியல் Dynamics of family relationship 557. குடும்ப மரபியல் Family genetics 558. குடும்பக் குமுகவியல் Sociology Of Family 559. குடும்பப் பொருளியல் Home economics 560. குண்டு ஏவியல் ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எறிதல். ஏவி எறிவதால் ஏவியல் எனக் குறிக்கப்பட்டது. Bomb ballistics 561. குபரிக்கன் இயல் தான்லி குபரிக்கு (Stanley Kubrick) சூலை 26, 1928 முதல்…
தமிழ் வெற்றி உறுதி – பேரறிஞர் அண்ணா
தமிழ் வெற்றி உறுதி “தமிழ் மொழிக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படவிருக்கிறது என்பதையறிந்து அதற்கு உறுதுணையாக இந்த விழா மிகச் சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டுவிட்டது என்னும்போது, ஐயப்பாடு கொண்டவர்களும், அச்சப்பட்டவர்களும்கூட இருப்பதால், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்குத் துணைதேடும் பெரும் பொறுப்பினைத் தங்கள் கடமையைக் கொண்டு நூல் எழுதி வெளியிடும் இந்த விழாக் குழுவினர் பாராட்டுக்குரியவராவார்கள். மற்ற வணிகத்தைப் போல இதுவும் ஒரு வணிகமோ என்று கருதவேண்டா. வெற்றி பெற வேண்டும் “தமிழ் மொழி ஆட்சி மொழியாவதற்கு இடையூறாக இருந்து வந்த இரண்டு…
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 21 திறனாய்வு (தொடர்ச்சி) 3 இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின்…
