இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது.  அவரை மதிப்புச் செய்யும் வகையில்…

புதிது புதிதாய் சிந்தனை செய்

                                                                                                  -கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி                                                                                                 புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை.                                                                                                 புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின்…

மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது

மானாமதுரை: இந்திய அரசின் “சங்கீத நாடக அகாதமி’ சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம்  உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இசைக்கருவிகள்  உருவாக்தக்தில் பங்களிப்போரையும் கலைஞராகக் கருதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, மானாமதுரை குலாளர் தெரு, கேசவன் மனைவி மீனாட்சி (60), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின்…

கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?

 – கலைஞர் வினா?  கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில், ”கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?” எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:  “கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்’ எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது….

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…

இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம்

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  “ஆ” நிலை அறிவியலாளர் (“B” Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் மொத்த  ஒழிவிடங்கள்: 115 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் – 31,  மின்னியல் – 31,  பொதுப்பொயியியல்(Civil) – 24,மாழைப்பொறியியல் (Metallurgical) – 09,  வேதியல் – 08,  கணிணியறிவியல் – 10,  நெசவியல் – 02….

தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் – முதல்வர் ஆணை

சென்னை :  திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில்  தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, “விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை – காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற  காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…

கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக! – த.இரா.பாலு

அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது! புதுதில்லி: இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர். இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம். அதனை 1974 ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து…

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்

  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள “ஆ”, “இ” பிரிவு (குரூப் “பி” மற்றும் “சி” ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் வரம்பு பணிகளுக்கேற்ப 25 முதல் 40 வரை உள்ளன.   இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 31.12.2013 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:…

தீயக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! கச்சத்தீவை மீட்போம்! – முதல்வர்

முதல்வர் செயலலிதா தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும்   தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார்.  “ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும்  நலிவுற்ற பிரிவினர் நலன் ஆகியவற்றுக்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல…

இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!

மனித உரிமை, சட்டம் ஒழுங்கு,  சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் கொலையாளிக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கும் பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! இருப்பினும்,  கனடாவில் சார்பில்  கனடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய்…