மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு
மதநல்லிணக்கக் கட்டடங்கள் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய்…
தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி
தாமரையின் ஊழல் இதழ்கள் ! – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்
செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார். தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 6 – வைகை அனீசு
(ஆனி 27,2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) 6 சட்டஅறிவு இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள் தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர் பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை. தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது. அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.] இன்படித் திரு.அருள்…
தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதேயன்றி முதல்நூலன்று – சி.இலக்குவனார்
தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமின்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக்…
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுதுவதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற்றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற்றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். “மன்பதை முதலில்…
தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது – தமிழண்ணல்
தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது பிற உலகத்தொன்மை இலக்கியங்கள் யாவும் மேலுலகக் கடவுளர் பற்றியனவாகவும், அம்மேலுலகினர் கீழே இறங்கி வந்து தெய்வத் தன்மை அல்லது அசுரத் தன்மையுடையவர்களுடன் கலந்து இடம் பெற்றனவாகவுமே முற்றிலும் காணப்படும். தமிழர்தம் தொன்மைக் குறிப்புகள் இவ்வுலகம் சார்ந்து, தெய்வத்தன்மை உற்றன பற்றியன. இவ்வுலகினராய் ‘வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகியவர்’ பற்றியன. மேலிருந்து கீழே வந்தவர் பற்றியனவாகாமல், கீழேயிருந்து மேலே சென்றவர் பற்றியன. கண்ணகி, மணிமேகலை மட்டுமின்றி, ‘தமிழர் தேசியக் காப்பியம்’ எனச் சமயப் பெரியோரால் போற்றப்பட்ட பெரியபுராணமும் கீழிருந்து…
தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள் – மலைமலையடிகள்
தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள் இனிப்பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத் திறம் பிறழாமல், அதனை ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனவுணர்விற்கு இசைந்தவண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவு செய்து விளக்கி மகிழ்ந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் 0 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு…
தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 3 ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு: பாவ பாவ பாவ நோக்கு புதிய புதிய பாவ நோக்கு கய்ய வீசும் பாவ நோக்கு கண்ணிமய்க்கும்…
தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம் – மறைமலையடிகள்
தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம்! தொன்றுதொட்ட சிறப்பும் இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரொடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்…
தமிழைக் கட்டாயமாக்குக! – நா.மகாலிங்கம்
தமிழைக் கட்டாயமாக்குக! மேடைதோறும் ‘தமிழ்! தமிழ்!’ என்று முழங்கிவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து வரும் அவல நிலையைச் சிறிதும் உணராமல் இருந்து வருகிறோம். இதிலிருந்து தமிழ்நாட்டை உடனடியாக மீட்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் அது யார் நடத்தும் பள்ளிக் கூடமாக இருந்தாலும், ‘கான்வெண்டாக’ இருந்தாலும் அவற்றில் எல்லாம் தமிழ்தான் பாடமொழியாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரைக் கட்டாயமாகத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் பாடம் நடத்தக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். இதற்காகத் தமிழ் நாட்டில்…
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…
