நற்றமிழாலே உயர்வோம்! – யாழ்ப்பாவாணன்
நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம் நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே! நாம் படிப்போம் தமிழைப் படிப்போம் நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே! நாம் கேட்போம் தமிழைக் கேட்போம் நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே! நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம் நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே! நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம் நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம் நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!…
வாழ்ந்து தழை – அரியரவேலன்
வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…
அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்
அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா… பசிக்கிறது! இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர் இரண்டு நாட்களாக எந்த உணவும் உண்ணவில்லை. இரண்டு நாட்களாக மலம் கூடக்கழிக்கவில்லை. ஒட்டிய வயிற்றுடன் அலைந்து திரிகின்றேன். ஒரு பிடி உணவேனும் தருவீர்களென எண்ணி! எனைப்பெற்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் வருவேனா உங்களின் வாசல் தேடி? முலைப்பால் கூட முழுதாகப்பருகவில்லை. எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற…
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்
(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…
செஞ்சீனா சென்றுவந்தேன் 19 – பொறி.க.அருணபாரதி
(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) 19. சீன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் ஓர் மாலைவேளையில், சியான் நகரத்தின் சான்சி இசைப்பள்ளியின் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டகாட்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. சற்றொப்ப 200 – 300 பேர் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஓர் சீனப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை நெற்தளிர் நாட்டியம் [யாங்கே -Yangge (秧歌)] என அழைக்கின்றனர். சீனாவின் நடனக்கலை என்பது, சீனமக்கள் தம் அறுவடைக்காலத்திலும், வேட்டையாடும் காலத்திலும்,…
ஏ…இறையே- துரை. ந. உ
ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன் நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்? வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி வலிகூட்டிச் செல்கிறாய் ஏன் ? துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு; மதிதெளிந்த செய்கையா கூறு சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்தள்ளுவதா சாதனை? சொல்மெய்தானோ! “இல்லையென்று சொல்லவில்லை; நல்லது தான்இருந்தால்” என்போரின் கூற்று ஏன் இப்படி ? பிடியும்…என் சாபம் படியும் : துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை என்பவரைத் தூற்றும் உலகு இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை இறையல்ல என்று விடு…
சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்
சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….
செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி
18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்…
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன்
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! பகுதி-2 : நாக.இளங்கோவன் (ஐப்பசி 2, 2045 / அக்.09, 2014 தொடர்ச்சி) வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது. மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று….
தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்
இயல் பகுப்பும் நூற்பா அளவும் தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு: எழுத்ததிகார இயல்கள் நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு. 1. நூல் மரபு, 2….
இயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன் – இலக்குவனார் திருவள்ளுவன்
இயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன் இலக்குவனார் திருவள்ளுவன் சனி, 25 அக்டோபர் 2014 (16:21 IST) Share on facebook Share on twitter More Sharing Services தமிழ்த் திரையுலகம், புகழ்மிகு கலைஞர்கள் பலரைத் தந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி நடிகர்கள் தமிழ்த் திரைப்படங்களில் பங்கேற்றுப் புகழ் பெற்று வந்த காலத்தில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து இலட்சிய நடிகரானவர் இராசேந்திரன். நடிகர் திலகம், மக்கள் திலகம் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த பொழுது இருவருடன்…
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-1
இன்றைக்கு இருக்கின்ற247தமிழ் எழுத்துகளில்239எழுத்துகளை மாற்றுவதற்கு நடக்கும்பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்). தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றிஉருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதிதமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகைதமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள். தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்உண்டு.தீப்பெட்டிக்குப் பெயர் ஒட்டும் தொழில், தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில், இலைச்சுருட்டு(பீடி) சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டுபொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு. தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்றுஉயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கைகுறைப்புத் தொழில் போன்று பல்வேறு…
