image-1027

சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!

   சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது.  இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான  விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்,  சாகித்ய  அகாதெமி, இனியேனும் தன்  போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :-    தமிழ் ஒரு கவிதைமொழி எனப் ...
image-1031

உலகின் மிக நீளமான காவியத்தின் சிறப்புப் பதிப்பு திபெத் மொழியில் வெளியீடு

  உலகில் மிக நீளமான காவியமான கசார் மன்னரின் திபெத் மொழி சிறப்புப் பதிப்பு, சீனாவின் சில தலைமுறை அறிஞர்களின் 30 ஆண்டுக்கால முயற்சிகளுடன்,  தொகுக்கப் பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. சீனத் திபெத் தன்னாட்சிப் பகுதியின் குமுகாய அறிவியல் கழகத்தினர்  இதனை அறிவித்துள்ளனர்.   மன்னர் கசார் என்னும் திபெத் இனத்தின் வீரக் காவியம், உலகளவில் மிக ...
image-1040

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4

( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது ...
image-948

தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!

இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும்  தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர்.  அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் ...
image-928

ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்

காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  ...
image-950

தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

                 தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. ...
image-955

காங்.உடன் கூட்டணி இல்லை – எதிர்பார்த்தவாறு கலைஞர் அறிவிப்பு

    சென்னை - இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில்  பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் ...
image-961

திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா

  பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், ...
image-944

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

அசித்தர் பேசி - 93827 19282     தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அசித்தர் குறிப்படம் அக்ரூட்                           -               உருப்பருப்பு, படகரு அங்குட்டம்                  -              பெருவிரலளவு அசோகு                         -              பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம்        -              கோழி முட்டை நெய்மம் அண்டவாதம்              -             ...
image-850

தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)

            பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும்.  ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் ...