தமிழ் அமைச்சரின் மரபார்ந்த ஆடை வேண்டுகோள் சாலச் சிறந்தது! – மரபு ஆடை நாளை வரவேற்போம்! தலைமைச்செயலகத்தில் நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன் வாரத்தில் ஒருநாள் அரசு ஊழியர்கள் அலுவலர்கள் வேட்டிசட்டை உடுத்தி வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மரபு உடை என்பதால் பெண்கள் சேலை அணிய வேண்டும். மரபுச்சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும். இதனால் பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படும். மரபு உடைகள் பேணப்படுவதற்கு இந்த வேண்டுகோள் ஆணையாகும் பொழுது…