திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 தொடர்ச்சி) திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.   (திருக்குறள், ௫௱௪௰ – 540) என்கிறார் திருவள்ளுவர். எண்ணியதையே எண்ணி எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எண்ணத்தை நிறைவேற்றுவது எளிது என்கிறார் திருவள்ளுவர் அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும் ஒருவரைப் பதவியில் அமர்த்தும்போது, அறங்களை மதித்து நடப்பவனா, நல்வழியில் பொருள் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறவனா, குற்றமான இன்பங்களை விரும்பாதவனா, சமயம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சாமல் உதவக் கூடியவனா என்ற…

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் – 4 இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்)  திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை இணைப்புரை  : திருக்குறள் ப. மதியழகன், இயக்குநர்,…