திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 தொடர்ச்சி) திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.   (திருக்குறள், ௫௱௪௰ – 540) என்கிறார் திருவள்ளுவர். எண்ணியதையே எண்ணி எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எண்ணத்தை நிறைவேற்றுவது எளிது என்கிறார் திருவள்ளுவர் அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும் ஒருவரைப் பதவியில் அமர்த்தும்போது, அறங்களை மதித்து நடப்பவனா, நல்வழியில் பொருள் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறவனா, குற்றமான இன்பங்களை விரும்பாதவனா, சமயம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சாமல் உதவக் கூடியவனா என்ற…

திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 திருவள்ளுவர் எக்காலத்திற்கும் எத்துறைக்கும் பொருந்தும் வகையில் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் “இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” என்றார். சில குறட்பாக்கள் நேரடியாகவே நாம் வேண்டிய தலைப்பிற்குப் பொருந்தும் வகையில் இருக்கும். சில குறட்பாக்கள் பொதுவாக இருப்பினும் நமக்குத் தேவைப்படும் கருத்திற்கு ஏற்ற விளக்கமாக இயைந்து வரும். அந்த வகையில் நேரடியாகவும் உட்பொருளாகவும்  விளக்க வகையிலும் பதவி மேலாண்மை குறித்த குறட்கருத்துகளைப் பார்ப்போம். மேலாண்மை என்றால் என்ன? மேலாண்மை (Management) என்பது ஒரு நிறுவனத்தின்…